'அது துணி செருப்பு...?!'-சினேகா

சமீபத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள 14 கி.மீ. தூரத்தை கிரிவலம் வந்தார்.
கால்களில் செருப்போடு அவர் கிரிவலம் வந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் காலில் செருப்பு அணியாமல்தான் கோவிலைச் சுற்றி வருவார்கள்.
இதனால் சினேகாவை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்தது. இதுகுறித்து நடிகை சினேகா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "2 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் எனது கால் எலும்பு முறிந்து விட்டது. அது இன்னும் முழுமையாக குணமாகவில்லை.
என்னால் செருப்பு அணியாமல் நடக்க முடியாது. அதனால் கோவில்களுக்கு செல்வதற்கென்றே துணியினால் செய்யப்பட்ட செருப்பை தயார் செய்து வைத்திருக்கிறேன். அந்த செருப்பை அணிந்துகொண்டுதான் கிரிவலம் சென்றேன்.
இந்த விளக்கத்தை இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களிடமும் சொல்லிவிட்டேன். அவர்களும் என் விளக்கத்தை ஏற்றுக் கொண்டனர், என்றார்.


Click it and Unblock the Notifications











