இப்பவும் காதலிக்கிறேன்.... - ஜெனிலியா

By Staff

Genelia with Riteish
இப்போதும் நான் காதலித்துக் கொண்டிதானிருக்கிறேன். ஆனால் எந்த ஆணையும் அல்ல, என் தொழிலை, என்று தத்துவம் பேச ஆரம்பித்து விட்டார் ஜெனிலியா.

பாய்ஸில் அறிமுகமாகி, சின்ன ஸ்டார்டிங் ட்ரபிளுக்குப் பிறகு முன்னணி நடிகையாகிவிட்ட ஜெனிலியா, ஒரு கட்டத்தில் ரித்தீஷ் தேஷ்முக் என்ற இளைஞரின் தீவிர காதலில் விழுந்தார்.

அதிலிருந்து மீள முடியாத அளவு இருவருக்கும் நெருக்கம் இறுகிப்போக, திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்தார்கள்.

ஆனால் ஒரு நடிகை தன் வீட்டுக்கு மருமகளாக வருவதா என பெரும் பணக்காரக் குடும்பமான ரித்தீஷின் பெற்றோர் எதிர்த்தனர். கூடவே, ஜெனிலியாவின் பழைய காதல் விவகாரங்களை இழுத்து விட்டு ரித்தீஷின் மனதை மாற்றிவிட்டனர்.

அதன் விளைவு, திருமணத்தன்று கடைசி நேரத்தில் வராமல் டிமிக்கி கொடுத்து விட்டார் ரித்தீஷ்.

ஆனாலும் மனம் தளராத ஜெனிலியா, தன் கேரியரில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் முதல் நிலை நடிகையாகத் திகழ்கிரார்.

காதல் தோல்வியிலிருந்து மீண்டு வந்தவர் இப்போது நல்ல தெளிவுடன் பேசுகிறார்.

எல்லாருக்கும்போல எனக்கும் காதல் வந்தது. போனது. அதற்காக என்னைக் கொன்றுகொள்ள முடியாதே... இப்போதும் நான் காதலிக்கிறேன். ஆனால், ஒரு ஆண்மகனை அல்ல, என் நடிப்பை.... தொழிலை நேசிக்கிறேன்.

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினி கேரக்டரை மிக விரும்பிச் செய்தேன். அதன் பலன் திரையில் தெரிந்தது. இனி இப்படித்தான் நம் வாழ்க்கை இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டதால் தெளிவாக இருக்கிறேன்... என்கிறார்.

சீக்கிரமே நல்ல காதலன் கிடைப்பாராக.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X