'சர்வம்'.. த்ரிஷா நீச்சல் மயம்!

திரிஷா நடித்துள்ள படம் சர்வம். தயாரிப்பில் இருக்கும் சர்வம் படத்தில் திரிஷா அட்டகாசமான நீச்சலுடைக் காட்சியில் தோன்றுகிறார்.
அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்க நீச்சல் காட்சியில் நடிக்க துணிந்து முடிவெடுத்தாராம் திரிஷா. இந்தக் காட்சி, படத்தின் முக்கிய காட்சியில் வருகிறதாம்.
இந்தக் காட்சியை வைத்து படத்தின் விளம்பரத்தை ரகளையாக்கி விடலாம் என ஆர்வமாக இருந்தனர் தயாரிப்பாளரும், இயக்குநரும்.
ஆனால் அதில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டாராம் திரிஷா. எக்காரணத்தைக் கொண்டும் நீச்சலுடைக் காட்சியை விளம்பரங்களில் கொண்டு வரக் கூடாது. படத்தை பார்க்க வரும்போது ரசிகர்கள் இந்தக் காட்சியை ரசித்துக் கொள்ளட்டும் என்று கூறி விட்டாராம் திரிஷா.
திரிஷாவின் இந்த அன்பான கட்டளையை மீற முடியாமல் நீச்சல் காட்சியை விளம்பரத்தில் காட்டுவதில்லை என்று தயாரிப்பாளரும், இயக்குநரும் தீர்மானித்துள்ளனராம்.


Click it and Unblock the Notifications











