பூர்ணாவின் மும்முனைத் தாக்குதல்!

முதலில் ஆசின் போல இருக்கிறார் என்று அனைவரும் பரவசம் அடைந்தனர் பூர்ணாவைப் பார்த்து. பின்னர் ரேவதி போல இருக்கிறார் என்று கூறினார்கள். ரேவதியின் மகள்தான் என்றும் சிலர் அடித்துக் கூறினார்கள். இவற்றையெல்லாம் தனக்குக் கிடைத்த பாராட்டாக எடுத்துக் கொண்ட பூர்ணா இப்போது ஒவ்வொரு அடியாக,தமிழ் சினிமாவில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
பார்த்திபனுடன் வித்தகன் படத்தில் நடித்து வரும் பூர்ணாவின் கையில் ஏகப்பட்ட படங்கள். துரோகி, ஆடுபுலி, நரன், கொலைத்தொழில், அர்ஜூனன் காதலி என கை கொள்ளாதஅளவுக்கு படங்களை வைத்துக் கொண்டு படு பிசியாக இருக்கிறார்.
இதுபோக மலையாளம், தெலுங்கிலும் கூட நிறையப் படங்களுக்குப் பேசிக்கொண்டிருக்கிறாராம். ஏன் இப்படி அரக்கப் பரக்க அடித்துப் பிடித்து ஏகப்பட்ட படங்களில் நடிக்கிறீர்கள் என்று கேட்டால், எனக்கு தமிழ் தவிர மலையாளம், தெலுங்கிலும் நிறைய நடிக்க வேண்டும் என ஆசை உள்ளது. மூன்று மொழிப் படங்களையும் குறி வைத்துதான் நடித்து வருகிறேன்.
என்னைத் தேடி வரும் படங்களின் கதை பிடித்திருப்பதால்தான் நிறையப் படங்களை ஒத்துக் கொண்டுள்ளேன். மேலும் உங்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கதை என்கிறார்கள். அப்படிக் கூறுபவர்களை நிராகரிக்க மனம் வரவில்லை. அதுபோக எனக்கும் கதை பிடித்திருப்பதால்தான் ஒத்துக் கொள்கிறேன்.
தமிழ் எனக்கு இன்னும் சரளமாக வரவில்லை. கற்றுக் கொண்டிருக்கிறேன். விரைவில் கற்றுக் கொள்வேன்.
விரைவில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாவேன். இது உறுதி என்று அடித்துச் சொல்கிறார் தெத்துப் பல்லழகி பூர்ணா.


Click it and Unblock the Notifications











