கதிர்வேல் படத்தில் முழு நீள கவர்ச்சியில் முக்குளித்துள்ளாராம் சுனேனா.

By Sudha

காதலில் விழுந்தேன் மூலம் ரசிகர்களின் இதயத்திற்குள் நுழைந்த சுனேனா ஒரு வித்தியாசமான அழகி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் சமீபத்தில் வெளியான வம்சம் படத்தில் அவருடைய நடிப்பழக பளிச்சிட்டது. இருப்பினும் ஒரு நாயகிக்குரிய பிரேக்கை அவர் பெறாமல் உள்ளார்.

இதுகுறித்து 'ரூம்' போட்டு யோசித்தபோதுதான் முக்கியமான ஒரு 'மேட்டர்' சுனேனாவிடம் குறைச்சலாக இருப்பதாக அவருக்குத் தெரிய வந்ததாம். அது கிளாமர். தமிழ் சினிமாவில் நாயகர்கள் 'எப்படி' இருந்தாலும் ஓ.கே. அரை தாடி, முழு தாடி, முக்கா தாடி, அவிஞ்சு போன முகம், சொறிஞ்சு விட்டது போன்ற முகம் என எந்த முகமாக இருந்தாலும் ஹீரோ என்று மாஸ்க் போட்டுக் கொண்டு மக்கள் மீது திணிக்கப்படும் நிலைதான் இன்று.

ஆனால் நாயகிகள் கண்டிப்பாக கிளாமர் 'அம்மனாக' இருக்க வேண்டும். அழகாக, அம்சமாக மட்டும் இல்லாமல், தேவையான அளவுக்கு கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்க வேண்டும். சுனேனா அப்படி இருக்கத் தவறியதால்தான் வாய்ப்புகள் வந்தும், வசதிகள் இருந்தும், ஸ்டார் அந்தஸ்து மட்டும் வராமல் தவறிப் போவதாக உரியவர்கள் உணர்த்தினார்களாம்.

இதையடுத்து இப்போது கவர்ச்சி 'கேனாலில்' சுனேனாவும் இறங்கி விட்டாராம். தற்போது நடித்து வரும் கதிர்வேல் படத்தில் திகட்டத் திகட்ட கவர்ச்சி காட்டியுள்ளாராம். இனி வரும் படங்களிலும் தீபாவளி பட்டாசாக பொறியப் போகிறாராம்.

டூ பீஸுக்கும் கூட ரெடி என்ற ரேஞ்சுக்கு வந்து விட்டாராம் சுனேனா. பெயர் 'பீஸ் பீஸாகிப்' போகாமல்இருந்தால் சரிதான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X