லூதியானாவிலிருந்து ஒரு கவர்ச்சி 'சாப்ட்வேர்'!

பெயரைக் கேட்டால் ஏதோ தவசி என்று பழைய காலத்துப் பெயர் போல தோன்றும். ஆனால் தப்சி பன்னு, படா அழகாக இருக்கிறார். இவ்ளோ அழகாக இருக்கும் இவர் மாடல் அழகியாக இருக்காமல் போய் விடுவாரா?, தப்சியும் ஒரு மாடல் அழகிதான்.
மாடல் அழகியாக இருந்தால் ஏதாவது அழகிப் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருப்பார்களா?, தப்சியும் அழகிப் போட்டியில் கலந்து கொண்டவர்தான். பேன்டலூன் பெமினா மிஸ் பளிச் முகம், சபி பெமினா மிஸ் அழகிய தோல் என இரு பட்டங்களைப் பெற்றவர் இந்த அழகு தப்சி.
அழகான பொண்ணாக மட்டும் இருக்காமல், அருமையாக படிக்கவு்ம் கூடியவராம் தப்சி. சாப்ட்வேர் என்ஜீனியரிங் படிப்பை முடித்துள்ள தப்சி, அப்படியே மாடலிங் மூலமாக இப்போது சினிமாவுக்கு வந்தே விட்டார்.
தெலுங்குதான் இவர் முதலில் நுழைந்த திரையுலகம். அங்கு இவர் நடித்த ஜும்மன்டி நாதம் ஹிட் ஆகியுள்ளதால் தப்சியும் ரசிகர்களிடையே ஹீட்டைக் கிளப்பி விட்டு விட்டார்.
தெலுங்கில் தேறியவர் தமிழுக்கும் சேவை செய்ய வேண்டுமல்லவா. அந்த இலக்கணப்படி தமிழுக்கும் வந்துள்ளார். ஒன்றுக்கு இரண்டு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தப்சி. ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும், வந்தேன் வென்றேன் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாகவும் பட்டையைக் கிளப்பவுள்ளார்.
இதுதவிர தெலுங்கிலும் பல படங்கள் ஓடி வர ஆரம்பித்துள்ளதாம். அங்குள்ள முன்னணி ஹீரோக்களுடன் தப்சியை புக் செய்ய ஆரம்பித்திருப்பதால் இலியானா அன் கோவினர் சற்று கிலியான முகங்களுடன் வலம் வருகின்றனராம்.
அப்ப தப்சியால் தமிழில் யாருக்கு ஆபத்து வரும்?. இப்போதைக்கு தமன்னாவுக்குத்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்...!


Click it and Unblock the Notifications











