நடிக்க வரும் புதுத் தென்றல்..ஷிபானி

இது, யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற சோசலிஸ காலம். இயக்குநர்கள் நடிகர்களாகின்றனர், இசையமைப்பாளர்களும் நடிகர்களாகின்றனர். இந்தி இசைப் புயல் ஹிமேஷ் ரேஷமய்யா, சோனு நிகாம் ஆகியோர் இசையமைப்பில் கலக்கியபடி நடிப்பிலும் ஸ்கோர் செய்தனர்.
இந்த வரிசையில் சேருகிறார் ஷிபானி காஷ்யப். இந்தி திரையுலகில் ஷிபானி ஒரு இளம் பாடகி. கூடவே இசையமைப்பிலும் புகுந்துள்ளார்.
ஹோ கயி ஹை மொஹபத் தும்சே பாடல்தான் ஷிபானியை ஹிட் ஆக்கிய பாடல். இதுதவிர, ஆல் இந்திய ரேடியோவின் எப்.எம். சேனுலுக்காக அவர் பாடிய தீம் சாங்கும் பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது. மேலும் அமுல் இந்தியா பாடலும் ஷிபானியை பிரபலப்படுத்திய பாடல்.
இதுதவிர நஸாகத், ஹக்கிம் தாரா சந்த் ஆகிய இரு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ள ஹிட் ஆக்கியுள்ளார் ஷிபானி. இதுதவிர கே.கே.மேனன், மனீஷா கொய்ராலா நடிப்பில் வெளியான சிர்ப் படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளர். இப்படத்தின் இசை பெரிதும் வரவேற்கப்பட்டதால் உற்சாகமாகியுள்ளார் ஷிபானி.
இந்த நிலையில் அடுத்து நடிக்கப் போவதாக கூறுகிறார் ஷிபானி. இதுகுறித்து அவர் கூறுகையில், சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என்னை நடிக்க வருமாறு கூப்பிடுகின்றனர். நானும் சீரியஸாக யோசித்து வருகிறேன். நல்ல கதை அமைந்தால் நடிக்கத் தயார்தான்.
எனது திறமைக்கு தீனி போடும் வகையிலான படமாக, கேரக்டராக இருந்தால் நிச்சயம் நடிப்பேன்.
அடுத்து நான் தயாரித்து வரும் இசை ஆல்பம், எனது தனிப்பட்ட உணர்வுகளின் பிரதிபலிப்பாக அமையும், கொஞ்சம் தத்துவமும் கலந்திருக்கும்.
இது ஒரு ரொமான்டிக் கம்போசிசனாக இருக்கும். கடந்து போன வாழ்க்கையையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் சொல்லும் ஆல்பம் இது. கூடவே காதலும் கலந்திருக்கும் என்கிறார் ஷிபானி.
ஷிபானி பார்க்க மட்டுமே பேசுவதிலும் அழகுதான்.


Click it and Unblock the Notifications











