எல்லோருக்கும் என் மீது ஆசை...!

கன்னட நடிகைகளிலேயே மிகவும் அழகானவர் ஷர்மிளா மந்த்ரா. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த செளத் ஸ்டைல் விருதுப் போட்டியில், கன்னட நடிகைகளிலேயே மிகவும் ஸ்டைலானவர் என்ற பட்டத்தைப் பெற்றார் ஷர்மிளா மந்த்ரே.
சுயம்வரா படத்தின் ஷூட்டிங்குக்காக பாங்காக் சென்றிருந்த ஷர்மிளா பெங்களூர் திரும்பியுள்ளார்.
தனது அழகு அனைவரையும் கவர்ந்திருப்பது குறித்து பெருமையாக இருப்பதாக கூறுகிறார் ஷர்மிளா. அதை விட முக்கியமாக, சினிமாவிலும் சரி, வெளியிலும் சரி என் மீது நிறையப் பேர் ஆசை வைத்துள்ளனர். என் மீது அன்பு காட்ட விரும்புகின்றனர். ஆனால் நான் திருமணம் செய்து கொள்ளும் வயதை இன்னும் எட்டவில்லை. ஆனால் என் மீது ஆசை வைத்திருப்பவர்களை நான் தவறாக நினைக்கவில்லை. அதை ரசிக்கிறேன், பெருமையாக உணர்கிறேன் என்கிறார் தில்லாக.
விஷயம் என்னவென்றால் சாஜினி என்ற படத்தில் தனி நாயகியாக அறிமுகமானார் ஷர்மிளா. அதில் மட்டும்தான் அவர் தனி நாயகியாக நடித்திருந்தார். ஆனால் அதன் பின்னர் நடித்த எந்தப் படத்திலு்ம் அவர் தனி நாயகியாக நடிக்கவில்லை.
ஆனால் அதற்காக கவலைப்படவில்லையாம் ஷர்மிளா. நான் இதுவரை நடித்த அனைத்துப் படங்களிலுமே எனது கேரக்டருக்கு நிச்சயம் முக்கியத்துவம் இருந்தது. எனவே இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்கிறார் கூலாக.
ஷர்மிளாவுக்கு தமிழில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறதா என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











