ஹன்ஸிகா.. கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் வாய்ப்புகள்!!

By Shankar

நடித்து இன்னும் ஒரு படம் கூட வரவில்லை... ஆனாலும் எல்லா ஹீரோவும் கேட்கும் நாயகியாக மாறியுள்ளார் ஹன்ஸிகா மோத்வானி.

தமிழில் தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நாயகர்களுடன் இவர் நடித்துள்ளார். ஆனால் இந்தப் படங்களில் ஒன்றுகூட இன்னும் வரவில்லை.

ஆனாலும், உதயநிதி ஹீரோவாக அறிமுகமாகும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'யில் இவர்தான் ஹீரோயின். வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஜோடியும் இவரே.

இவை தவிர சிம்பு மற்றும் அஜீத் படங்களுக்கும் இவரிடம் தேதி கேட்டுள்ளனர் இயக்குநர்கள்.

அப்படியென்னதான் இருக்கு அவரிடம் என்று சக நாயகிகள் பொருமித் தீர்க்கிறார்களாம். இந்த நிலையில், அவருக்கு தெலுங்கிலிருந்து ரூ 1 கோடிக்கும் அதிகமான சம்பள 'ஆஃபருடன்' வாய்ப்புகள் வந்துள்ளனவாம்.

அப்படி வந்தவற்றில் முக்கியாமானது தில் ராஜுவின் படம். இந்தப் படத்தில் கமல் மகள் ஸ்ருதியும் உண்டு.. என்றாலும் ஹன்ஸிகாவுக்குத்தான் முதலிடமாம். சித்தார்த்துக்கு ஜோடி. நல்ல சம்பளம் என்றதும், தமிழுக்கு தந்த தேதிகளை அட்ஜஸ்ட் செய்து கொடுத்துவிட்டாராம்.

பணம் பதினொன்றையும் செய்யும்..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X