நான் 'சீரியஸ்' அல்ல .. ரெய்மா சென்

வங்காளத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் ரஸகுல்லா ரெய்மா. இதுவரை வங்காளத்திலும், இந்தியிலும் நிறைய சீரியஸ் ரோல்களில் தலைகாட்டியுள்ளார். ஆனால் அது ரெய்மாவுக்கு அலுத்து விட்டது.எனவே காமெடி உள்பட அனைத்து விதமான கேரக்டர்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.
இது குறித்து ரெய்மா கூறுகையில், சினிமாவில் பலவிதமான கேரக்டர்கள் உள்ளன. ஒரு நடிகரோ அல்லது நடிகையோ தனக்கு எந்த கேரக்டர் கொடுக்கப்பட்டாலும் அதில் நடிக்க தெரிந்திருக்க வேண்டும். எனக்கு எல்லா வகையான கேரக்டர்கள் மீதும் ஈடுபாடு, ஆர்வம் உண்டு. அது கமர்ஷியலோ அல்லது ஆஃப் பீட் படமோ. அதுகுறித்து எனக்குக் கவலை இல்லை.
எனக்கென்று இமேஜ் விழுவதை நான் விரும்பவில்லை. நல்ல நடிகையாக அறியப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
நான் நடித்த பாலிவுட் படமான ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிட்டெட் படத்தில் எனக்கு சீரியஸான கேரக்டர்தான். ஆனாலும் காமெடியும் இருந்தது.
விரைவில் வெளி வரப்போகும் சி கம்பெனி படத்தில் நான் காமெடி செய்துள்ளேன். இப்படம் எனது இமேஜை துடைத்தெறியும் என்று நம்புகிறேன்.
படம் பார்க்க வருபவர்கள் சோகத்துடன் போகக் கூடாது. சிரித்தபடி செல்ல வேண்டும். படத்தை அனுபவித்து பார்க்க வேண்டும். சோகம், அழுகை, உணர்ச்சிப்பெருக்கு ஆகியவை அனைவரிடமும் இருப்பதால், அதையெல்லாம் மறக்க சினிமாதான் ஒரே வழி. அங்கும் அதையே காட்டினால் எப்படி.
சி கம்பெனியில் நிறைய காமெடி இருக்கிறது. எனது கேரக்டர் ரொம்பவே காமெடியாக இருக்கும். படம் பார்க்க வரும்அனைவரும் நன்கு சிரித்து மனசு லேசாகி வீடு திரும்புவார்கள் என்று நம்புகிறேன்.
சி கம்பெனியில் நான் மிதுன் சக்கரவர்த்தியின் தங்கையாக நடித்துள்ளேன். எனது ஜோடியாக துஷார் கபூர் நடித்துள்ளார். மிதுன் தாதாவாக வருகிறார். படம் முழுக்க காமெடிதான்.
நிறைய மெச்சூர்டான கேரக்டர்களில் நடித்து விட்டேன். எனது வயதுக்கேற்ற ரோல் இப்போதுதான் கிடைத்துள்ளது. சும்மா விடுவேனா, கலக்கியுள்ளேன் என்கிறார் ரெய்மா.
ரெய்மா சொல்வது 'மெய்'மா!


Click it and Unblock the Notifications











