தீபிகாவின் 'பாரா' முகம்!

ஷாருக்கான், பாராகான் இணைந்து தயாரித்த படம் ஓம் சாந்தி ஓம். பாராகான் தான் இதை இயக்கியிருந்தார். இப்படத்தின் மூலம் தீபிகா ஒரே நாளில் சூப்பர் ஹாட் நடிகையாகி விட்டார்.
அதற்குப் பிறகு நிறையப் படங்களில் நடித்தாரோ, இல்லையோ, அவரைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வந்தவண்ணம் உள்ளன. முதலில் டோணியுடன் கிசுகிசுக்கப்பட்டார். பிறகு யுவராஜ் சிங்குடன் கிசுகிசுக்கப்பட்டார். இப்போது ரிஷிகபூரின் மகன் ரன்பீர் சிங்குடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் தீபிகா. கடந்த வாரம் மும்பையில் நடந்த லக்மே பேஷன் வீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தீபிகா. இதே நிகழ்ச்சியில் பாரா கானும், ஷாருக்கின் மனைவி கெளரியும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், கரீனா கபூர், அவரது புதுக் காதலர் சைப் அலிகான், ஊர்மிளா மடோன்கர், பத்மலட்சுமி, சுனிதா மேனன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இவர்கள் எல்லோரையும் சந்தித்த தீபிகா, கெளரியையும், இருவரையும் தீபிகா கடைசி வரை கண்டுகொள்ளவே இல்லை. ஒப்புக்குக் கூட ஒரு ஹாய் சொல்லவில்லை தீபிகா. இதனால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஓம் சாந்தி ஓம் வந்த பிறகு பாரா கானை ஒருமுறை கூட தீபிகா
சந்திக்கவில்லை என்றும் ஒரு தகவல் கூறுகிறது.
தீபிகாவின் செயலை பாலிவுட்டில் பலரும் விமர்சித்துள்ளனர். தீபிகா நன்றி மறந்து விட்டார். விளம்பர மாடலாக மட்டுமே அறியப்பட்ட அவருக்கு ஓம் சாந்தி ஓம் மூலம் பாராகானும்,ஷாருக்கானும் மிகப் பெரிய நடிகை என்ற அந்தஸ்தைக் கொடுத்தனர். ஆனால் பாராகானை முற்றிலும் மறந்து விட்டார் தீபிகா.
பாராவுக்கு பிறந்த நாள் வந்தபோது அப்போதும் தீபிகா வாழ்த்து சொல்லவில்லை. பாராவுக்கு குழந்தை பிறந்தபோதும் வாழ்த்து சொல்லவில்லை. படம் வந்த பின்னர் ஒருமுறை கூட பார்ககவில்லை. இப்போது நேரில் சந்தித்தும் கூட முகத்தை திருப்பிக் கொண்டு போய் விட்டார். இது அநாகரீகமான செயல் என்கின்றனர் அவர்கள்.
தீபிகாவுக்கு ஏன் இந்த 'பாரா'முகமோ?


Click it and Unblock the Notifications











