முதல் முறையாக 'ஐட்டம் கேர்ள்' ஆகும் கத்ரினா!

கத்ரினா தனது நடிப்பு வரலாற்றில் ஐட்டம் கேர்ள் பாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல்முறை. இப்படத்தை ஃபாரா கான் இயக்குகிறார். அவரது கணவர் ஷிரிஷ் கண்டர் தயாரிக்கிறார்.
காத்ரீனாவுக்கு ஜோடி போடுபவர் அக்ஷய் குமார். ஏற்கனவே இவர்கள் நமஸ்தே லண்டன், வெல்கம்,சிங் இஸ் கிங் சமீபத்தில் வெளியான தீ தானா தன் போன்ற படங்களில் இணைந்தவர்கள்.
ஆனால் இந்தப் படங்களுக்கு அப்படியே நேர் மாறாக டீஸ் மார் கான் படம் இருக்குமாம்.
படம் குறித்து கண்டர் கூறுகையில், காத்ரீனா ஐட்டம் கேர்ள் பாத்திரத்தில் நடிப்பது உண்மைதான். ஆனால் அதற்கு மேல் படத்தில் அவரின் கதாப்பாத்திரத்தைப் பற்றி எதுவும் என்னால் இப்போதைக்கு கூறமுடியாது' என்றார்.
Comments


Click it and Unblock the Notifications