For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நோ' சொன்ன ஜான் - கண்ணீர் விட்ட ஆசின்!

    By Chakra
    |

    Asin
    இந்தி காக்க காக்க படத்தில் ஆசினைப் போட வேண்டாம் என நாயகன் ஜான் ஆப்ரகாம் கூறி விட்டதால் கண்ணீர் விட்டு அழுதாராம் ஆசின்.

    தமிழில் சூர்யா, ஜோதிகா நடித்த படம் காக்க காக்க. தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு இப்படம்தான் புது வாழ்வு கொடுத்தது. இப்போது இப்படத்தை இந்தியில் ரீமேக்குகிறார்கள். ஜான் ஆப்ரகாம்தான் ஹீரோ.

    படத்தில் ஹீரோயினாக நடிக்க ஆசினை தேர்வு செய்துவைத்திருந்தார் இயக்கப் போகும் விபுல் ஷா. ஆனால் இப்போது ஆசின் படத்தில் இல்லையாம். காரணம், ஜான் ஆப்ரகாம்தான் ஆசின் வேண்டாம் எனக் கூறி விட்டாராம்.

    இதற்கு ஜான் ஆப்ரகாம் சொன்ன காரணம் கிட்டத்தட்ட கஜினி சாயலில் காக்க காக்க படமும் இருக்கிறது. இரண்டும் வேறு வேறு கதை என்றாலும் கூட கஜினியின் நிழல் காக்க காக்க படத்திலும் உள்ளது. ஏற்கனவே இந்தி கஜினியில் ஆசின்நடித்து விட்டார். இப்போது இதிலும் நடித்தால் சரியாக இருக்காது என்று பீல் பண்ணுவதாக விபுலிடம் கூறியுள்ளார்.

    ஆனால் விபுலுக்கோ ஆசினைத்தான் ஹீரோயினாக்க வேண்டும் என ஆசை. ஏற்கனவே அவரது லண்டன்ட்ரீம்ஸ் படத்தில் ஆசின்தான் நாயகியாக நடித்திருந்தார். அந்த அனுபவத்தால் இந்தப் படத்திலும் ஆசினை புக் செய்ய ஆர்வமாக இருந்தார். ஆனால் ஹீரோ வேறு மாதிரியாக நினைத்ததால் வேறு வழியில்லாமல் ஆசினிடம் ஸாரி சொல்லி விட்டாராம் விபுல்.

    அதைக் கேட்டதும் ஆசினுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்து விட்டதாம். தன்னைப் போய் ஜான் நிராகரித்து விட்டாரே, அதுவும் நல்ல நண்பராக இருந்து கொண்டு இப்படிச் சொல்லி விட்டாரே என்று நெருக்கமானவர்களிடம் புலம்பித் தீர்த்து விட்டாராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X