சூர்யா .. உருகும் மந்திரா!

By Staff

Mandra Bedi
சிவனே என்று கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்து வந்தவர்களை, தனது கமென்டரி கலக்கலையும் சேர்த்துப் பார்க்க வைத்து ரசிகர் கூட்டத்தை வளைத்துப் போட்ட மந்திரா பேடிக்கு, நம்ம ஊர் சூர்யாவுடன் ஜோடி போட்டு ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது ஆசையாம்.

கிரிக்கெட் ஆட்டம் - மந்திரா பேடிக்கு முன்பு, பின்பு என இரண்டாகப் பிரிக்கும் வகையில் மந்திராவின் தாக்கம், இந்திய கிரிக்கெட் உலகில் மிக முக்கியமானது.

தனது கலக்கல் காஸ்ட்யூம்களாலும், அழகான ஆங்கிலத்தாலும், கமென்டரிக்கு தனி களையையே கொண்டு வந்தவர் மந்திரா. கிரிக்கெட் ஆட்டத்தை விட இவரது வர்ணனை அழகையும், வசீகரத்தையும் ரசிக்கத்தான் ரசிகர்களிடையே பேரார்வம் இருக்கிறது.

மந்திரா சினிமாவிலும் தலை காட்டியவர். தமிழில், சிம்புவுடன் வல்லவன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு அசத்தியவர். அதன் பின்னர் தமிழ் பக்கம் அவர் திரும்பிப் பார்க்கவில்லை.

ஆனால் இப்போது மந்திராவுக்கு ஒரு ஆசை இருக்கிறதாம். அது சூர்யாவோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது.

சென்னைக்கு சமீபத்தில் வந்திருந்த மந்திரா பேடி, தமிழில் எனக்குப் பிடித்த ஹீரோ சூர்யாதான். அவருடைய காக்க காக்க படம் பார்த்தேன். அது என்னைக் கவர்ந்து விட்டது. அவருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் கட்டாயம் நடிப்பேன் என்றார்.

சரி மந்திரா, உங்களைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வந்தவண்ணம் இருக்கிறதே என்று கவலையோடு கேட்டால், என்னை பற்றி நிறைய கிசுகிசுக்களும் வதந்திகளும் வருகின்றன. அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று அலட்டிக் கொள்ளாமல் கூறினார் மந்திரா.

ஜோ.. சூர்யா பத்திரம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X