உண்ணாவிரதம்-மும்தாஜ் வராதது ஏன்?

By Staff

Mumtaj
நடிகை மும்தாஜுக்கு வயிற்றில் ஆபரேஷன் நடந்துள்ளதாம். இதனால்தான் தன்னால் சென்னை உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளாராம்.

சமீபத்தில் சென்னையில் நடந்த திரையுலக உண்ணாவிரத்தில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். ஒரு சிலர் கலந்து கொள்ளவில்லை. அவர்களில் ஒருவர் நடிகை மும்தாஜ்.

வழக்கமாக நடிகர் சங்கப் போராட்டங்களில் முதல் ஆளாக கலந்து கொள்பவர் மும்தாஜ். இந்த நிலையில் சென்னை போராட்டத்தில் அவர் கலந்து கொள்ளாதது குறித்து கேள்விக்குறிகள் எழுந்தன.

ஆனால் உண்ணாவிரதம் நடந்தபோது மும்தாஜ் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம். அவருக்கு வயிற்றில் நீண்ட நாளாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது முற்றி அறுவைச் சிகிச்சை நிலைக்குப் போய் விட்டதாம்.

உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறி விட்டதால் மும்பை சென்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டாராம்.

இதை விளக்கி சரத்குமாருக்கு மும்தாஜ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஆபரேஷன் நடந்ததாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாலும் தான் தன்னால் வரமுடியவில்லை. இதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளாராம் மும்தாஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X