ஒரு அத்தை அம்மாவாகிறார்!

நமீதா வீட்டுக்குப் போவோர் அங்கு ஒரு குட்டிப் பாப்பாவை பார்த்திருக்கலாம். நமீதாவும், அந்தக் குழந்தையும் பாசத்துடன் துள்ளி விளையாடுவதையும் பார்த்திருக்கலாம். வீட்டில் இருந்தால் அந்தக் குழந்தையை விட்டு கொஞ்சம் கூட பிரிய மாட்டார் நமீதா.
அன்பைக் கொட்டி, பாசத்தை ஊட்டி வளர்த்து வருகிறார் அந்தக் குழந்தையை. அது வேறு யாரும் அல்ல, நமீதாவின் அண்ணன் மகள்தான்.
இந்தக் குட்டிப் பாப்பாவுக்கு இப்போது 3 வயதாகிறது. இதை தனது சொந்தக் குழந்தை போலவே பாவித்து வளர்த்து வருகிறார் நமீதா. இந்த நிலையில்தான் இக்குழந்தையை பேசாமல் தானே வளர்த்தால் என்ன என்ற எண்ணம் நமீதாவுக்கு வந்தது.
இக்குழந்தையை நானே தத்தெடுத்துக் கொள்கிறேன் என்று அண்ணனிடமும், வீட்டினரிடமும் நமீதா கூற, அவர்களும் உடனே ஓ.கே. சொல்லி விட்டார்களாம்.
இதையடுத்து தத்தெடுக்கும் வைபவத்திற்கு சொந்த ஊரான சூரத்தில் ஏற்பாடு செய்துள்ளனராம். விரைவில் சூரத்தில் தனது அண்ணன் மகளை மகளாக தத்தெடுக்கப் போகிறார் நமீதா.


Click it and Unblock the Notifications











