அடிச்சு நடிக்கணும்-நமீதா ஆசை!

By Staff

Namitha with Ravi Chandran
வில்லன்களை அடித்துப் புடைக்கும் அதிரடியான கேரக்டரில் நடிக்க ரொம்ப ஆசையாக இருக்கிறது என்கிறார் நமீதா.

கவர்ச்சி, கவர்ச்சி, அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதைப் போல தொடர்ந்து கவர்ச்சிகரமாக நடித்து வருகிறார் நமீதா. இடை இடையே வித்தியாசமான சில ரோல்களில் (அதிலும் கூட கவர்ச்சியைப் புகுத்தி விடுகிறார்கள் இயக்குநர்கள்) தலையைக் காட்டினாலும் கூட கவர்ச்சி மட்டுமே நமீதாவின் முகவரியாக இன்று வரை இருக்கிறது.

ஆனால் நமீதாவின் பரந்து விரிந்த மனசுக்குள் வேறு விதமான பல ஆசைகளும் புதைந்து கிடக்கின்றன. அதாவது விஜயசாந்தி ரேஞ்சுக்கு வில்லன்களை ஓட ஓட விரட்டி, அடித்துப் புதைத்தெடுப்பதைப் போன்ற அதிரடியான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதுதான் நமீதாவின் நீண்ட நாள் ஆசையாம்.

தனது உயரத்திற்கும், ஆஜானுபாகுவான உடல் அமைப்புக்கும் இப்படிப்பட்ட ரோல் கிடைத்தால் அசத்தி விடலாம் என்று ஆசையாக கூறுகிறார் நமீதா.

இப்படிப்பட்ட ஆசையை வைத்துக் கொண்டு ஏன் தொடர்ந்து கிளாமராகவே தோன்றுகிறீர்கள் என்று கேட்டால், நானா ஆசைப்பட்டு அப்படி நடிக்கிறேன். எனது உடல் வாகுக்கு கிளாமர்தான் சரியாக இருக்கிறது. நான் என்ன டிரஸ் போட்டாலும் அது கிளாமராகத்தான் தெரிகிறது. சரி போகட்டும் என்று விட்டு விட்டேன் என்கிறார் நமீதா செல்லமாக அலுத்துக் கொண்டு.

முன்பை விட இப்போது நன்றாக தமிழில் பேச ஆரம்பித்திருக்கிறாராம் நமீதா. தனியாக ஒரு தமிழ் வாத்தியாரை வைத்து ட்யூஷனும் கற்றுக் கொள்கிறாராம். விரைவில் சொந்தக் குரலில் பேசி நடிக்கும் திட்டமும் உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X