கோவாவில் நயனதாரா

வெங்கட் பிரபு இயக்க, செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க, ஜெய், சினேகா உள்ளிட்டோர் நடிக்க உருவாகும் படம் கோவா.
இப்படத்தில், தற்போது நயனதாராவும் இடம் பெறுகிறாராம். அதுவும் கவர்ச்சிகரமான ஒரு கேமியோ ரோலில். படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இது இருக்குமாம். இதை ரகிசயமாக வைத்துள்ளனர்.
நயன் சம்பந்தப்பட்ட காட்சியை சமீபத்தில் சென்னையில் வைத்துப் படமாக்கியுள்ளனர். இந்தக் காட்சியில் படத்தின் நாயகர்களான ஜெய், வைபவ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதை விட முக்கியமானது இந்தப் படத்தில் நடிப்பதற்காக நயனதாரா ஒரு காசு கூட வாங்கவில்லையாம். ஏன் என்றால், வெங்கட் பிரபுவின் தீவிர ரசிகையாம் நயனதாரா.
ஏற்கனவே ரஜினிகாந்த்தின் குசேலன் படத்தில் கெளரவ வேடத்தில் வந்து போயிருந்தார் நயனதாரா. தற்போது ரஜினி மகளின் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
படம் பொங்கலுக்கு விருந்து படைக்க வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











