மணி படத்தில் பிரியா மணி!

குரு படத்தைத் தொடர்ந்து மணிரத்தினம் அடுத்து தமிழ் மற்றும் இந்தியில் ஒரு படம் இயக்குகிறார். ஒரே நேரத்தில் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விக்ரம், பிருத்விராஜ், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்கின்றனர்.
தமிழில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். இந்தியில் அபிஷேக் பச்சன் நாயகன். இரு மொழிகளிலும் ஐஸ்வர்யாதான் நாயகி. வித்தியாசமான வில்லத்தனம் காட்டி நடிக்கவுள்ளார் பிருத்விராஜ்.
பிருத்விராஜுக்கு ஜோடியாக நடிக்க பிரியாமணியைத் தேர்வு செய்துள்ளாராம் மணிரத்தினம்.
ஏற்கனவே மணிரத்தினத்தின் ஆயுத எழுத்துப் படத்தில் மாதவன் வில்லத்தனம் செய்திருந்தார். அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். இப்படத்தில் சூர்யா, சித்தார்த் ஆகியோர் இருந்தும் கூட, மாதவனின் கேரக்டர்தான் பெரிதாக பேசப்பட்டது.
இதனால், இப்படத்திலும் தங்களது ரோல் மற்றவர்களை விட வெகுவாக பேசப்படும் என்ற நம்பிக்கையில் பிருத்விராஜும், பிரியாமணியும் உள்ளனராம்.


Click it and Unblock the Notifications











