பூர்ணா மீது தயாரிப்பாளர் புகார்!

By Staff

Poorna
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு நாயகி பூர்ணா மீது கொடைக்கானல் படத் தயாரிப்பாளர் புகார் கூறியுள்ளார். பூர்ணாவால் தனது படம் கொடைக்கானல் 70 நாட்களுக்கும் தாமதமானதாகவும் இதனால் நிறைய நஷ்டம் ஆகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சொர்ணலட்சுமி மூவீஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் கொடைக்கானல். புதுமுகங்கள் திலக், சேகர், பூர்ணா நடித்துள்ளனர். இந்த படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்தப் படத்தில்தான் பூர்ணா அறிமுக நாயகியாக ஒப்பந்தமானார். ஆனால் அதற்குள் முனியாண்டி... முந்திக்கொண்டது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சொர்ணலட்சுமி கூறுகையில்,

இந்தப் படத்துக்காக பூர்ணாவை ஹீரோயினாக்கினோம். எங்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே வேறொரு படத்தில் நடிக்கப் போய்விட்டார். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தோம். அவர்கள் நடவடிக்கை எடுக்கவும் தயாரானார்கள்.

இது தெரிந்ததும், பூர்ணாவை ஒப்பந்தம் செய்த அந்த இன்னொரு இயக்குநரும் தனது படத்திலிருந்து அவரை நீக்கிவிடுவதாகக் கூறினார்.

ஆனால் நாங்கள்தான் புதுமுகமாக வந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சமாதானமானோம். இதனால் எங்கள் படம் 70 நாட்கள் தாமதமானது. ஏகப்பட்ட நஷ்டம் வேறு.

கடைசியில் எங்கள் நல்ல மனசு பூர்ணாவுக்குப் புரிந்துவிட்டது. வந்து நடித்துக் கொடுத்துவிட்டுப் போனார், என்றார் சொர்ணலட்சுமி.

நடிகர் விஜய்யால் சின்ன ஆஸின் என்று புகழப்பட்டவர் இந்த பூர்ணா. ஆனால் முதல் படத்திலேயே பூர்ணாவால் வந்திருக்கும் நஷ்டத்தைப் பார்த்தால் இந்தப் 'பட்டத்தை' மாற்றித் தரவேண்டும் போலிருக்கிறதே...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X