அட்வான்ஸைக் கொடுத்தார் நயனதாரா - தடை நீக்கம்

இயக்குநர் லிங்குச்சாமியின் சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் தயாரிப்பில் உருவாகும் படம் பையா. லிங்குச்சாமி இயக்குகிறார். பருத்தி வீரன் கார்த்தி நாயகன். நாயகியாக ஒப்பந்தமாகியிருந்தவர் நயனதாரா.
ஆனால் படம் தாமதமாகவே நயனதாரா படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்தார். ஆனால் வாங்கிய அட்வான்ஸ் பணத்தைத் திருப்பித் தரவில்லை.
இதையடுத்து அவர் மீது தயாரிப்பாளர் போஸ், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். பதிலுக்கு நயனதாரா நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.
இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியதில், அட்வான்ஸைத் திருப்பித் தர முடியாது என பிடிவாதமாக கூறினார் நயனதாரா. இதையடுத்து அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் நயனதாரா அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் தனது பிடிவாதத்தில் அவர் உறுதியாக இருந்து வந்தார். இந்தச் சூழ்நிலையில் இன்று தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் நயனதாரா.
அப்போது வாங்கிய அட்வான்ஸ் பணமான ரூ. 15 லட்சத்தை அவர் திருப்பித் தந்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் மீதான தடையை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.
இனிமேல் நயனதாராவை யார் வேண்டுமானாலும் புதிய படங்களுக்கு புக் செய்து கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











