திரும்பி வர விரும்பும் ரக்ஷிதா

Rakshitha
மறுபடியும் நடிப்புக்கு ரிட்டர்ன் ஆக விரும்புவதாக கூறுகிறார் கன்னடத்து நாயகி ரக்ஷிதா.

கன்னடத்தில் ரக்ஷிதாவுக்கு கிரேசி க்வீன் என்று செல்லப் பெயர். தமிழிலும் இவர் தம் படம் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். மதுர படத்தில் விஜய்யுடன் நடித்தார். அதன் பிறகு காணாமல் போய் விட்டார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கன்னடத்திலும் பிசியாக இரு்நத ரக்ஷிதா 3 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் -நடிகர் பிரேமை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

கவர்ச்சி தாரகையாக அறியப்பட்ட ரக்ஷிதாவுக்கு இப்போது ஒரு வயதில் சூர்யா என் மகன் உள்ளார். விரைவில் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்கப் போகிறாராம் ரக்ஷிதா. அதேசமயம் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறாராம்.

அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வருகின்றனவாம். நல்ல கதையாக பார்த்துக் கொண்டிருக்கிறாராம். அது கிடைப்பதற்கு முன்பு அவரது கணவர் இயக்கி நடிக்கப் போகும் ஜோகய்யா படத்தில் ரக்ஷிதா முக்கிய கேரக்டரில் நடிக்கலாம் என்று கன்னடத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

மீண்டும் நடிக்க வருவது குறித்து ரக்ஷிதா கூறுகையில், பலரும் என்னை அணுகி வருகின்றனர். நானும் சில கதைகளைப் பார்த்து பரிசீலித்து வருகிறேன். எதையும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்து விட்டால் அடுத்து பேச்சுவார்த்தைதான்.

மீண்டும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். நான் இப்போது ஒரு மனைவி, ஒரு தாய். எனவே அதற்குப் பொருத்தமான கேரக்டரில் மட்டும்தான் நடிப்பேன். எனக்கு எனது கணவரின் ஆதரவும் அமோகமாக இருக்கிறது என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X