ஜிலீர் டூ குபீர்!

அபிராமி ராமநாதன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிப்புக்குத் திரும்பியிருக்கும் படம் பஞ்சாமிர்தம்.
வித்தியாசமான கதைக் களத்துடன் முழுக்க முழுக்க காமெடி பஞ்சாமிர்தத்தைத் தடவி இப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பின்போது யூனிட்டே விழுந்து விழுந்து சிரித்தபடிதான் ஷூட்டிங் நடந்து முடிந்ததாம். அந்த அளவுக்கு படத்தில் காமெடி எக்கச்சக்கமாக இருக்கிறதாம்.
முக்கியமாக ஜெயராமும், சமிக்ஷாவும் இணைந்து காமெடியில் பெரும் ரகளையே செய்துள்ளனராம். இதுவரை பார்த்திராத சமிக்ஷாவை இப்படத்தில் ரசிகர்கள் பார்க்கப் போகிறார்களாம்.
சமிக்ஷாவின் பலமான கவர்ச்சியோடு, காமெடியையும் சரிவிகிதத்தில் கலந்து, கலக்கலாக கொடுத்துள்ளனராம்.
சரி படத்தின் கதை என்னவோ? ராமாயாணத்தில் வரும் ஒரு சின்ன 'ஏரியா'வை எடுத்து அதற்கு திரைக்கதை 'யூரியா'வைக் கொடுத்து பஞ்சாமிர்தமாக்கியிருக்கிறார்களாம்.
ராமநாதனின் 'பஞ்சாமிர்தம்', பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தத்தின் சுவையை மிஞ்ச வாழ்த்துவோம்!


Click it and Unblock the Notifications











