இதெல்லாம் சகஜங்க... சங்கீதா

By Staff

Sangeetha
உயிர் படத்தில் கொழுந்தனைக் காதலிக்கும் அண்ணியாக நான் நடித்ததை நிறையப் பேர் விமர்சிக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் இன்றைக்கு பல குடும்பங்களில் இது நடக்கத்தான் செய்கிறது என்கிறார் உயிர் படத்தில் இப்படிப்பட்ட 'புரட்சி அண்ணி' வேடத்தில் நடித்த சங்கீதா.

நிருபர்களிடம் நேற்று சங்கீதா சொன்ன 'புரட்சிக் கருத்துக்களை' இங்கே அப்படியே தருகிறோம்:

கொழுந்தனைக் காதலிக்கும் அண்ணி வேடத்தில் நடிப்பதற்கு முன் கிரிமினல் சைக்காலஜி படித்த சில நண்பர்களிடம் இதுகுறித்து விவாதித்தேன். அவர்கள் தங்களிடம் உள்ள சில வழக்குகளைக் காட்டி, இந்த மாதிரி நாட்டில் நடப்பது சகஜம்தான். நீ நடிக்கத் தயங்காதே என்றார்கள்.

நானும் பின்னர் இதே போன்ற பல சம்பவங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நான் ஏற்ற அந்தப் பாத்திரத்தை மட்டும் பாருங்கள். அந்தப் படத்தில் சூழ்நிலை என் கேரக்டரை அப்படி மாற்றுகிறது. ஆனால் அந்த தவறுக்கும் கூட தண்டனை அளிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொழுந்தனைக் காதலிக்கும் அண்ணிகள் இருக்கிறார்கள் என்ற நிஜம் மாறப் போவதில்லையே... என்று கேட்பவர்கள் அதிர்ந்தாலும் கொஞ்சம் கூட யோசி்க்காமல் பேசிக் கொண்டே போனார் சங்கீதா. என்னத்த சொல்றது...!

சில படங்களில் காசுக்காக நடிக்கிறேன். சில படங்களில் அந்த இயக்குநர்கள் பாத்திரங்களைப் படமாக்கும் அழகில் மயங்கி நடிக்கிறேன். அப்படிப்பட்ட படம் பாலாவின் பிதாமகன். அந்தப் படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன், என்கிறார் சங்கீதா.

கல்யாணம், குடும்பம், குழந்தை.... ஐடியா இருக்கா..?

நிச்சயமா... சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசையா இருக்கு. யாராவது ஒரு நல்லவர் கிடைத்தால் கழுத்தை நீட்டி விடுவேன், என்ற சங்கீதாவுக்கு செல்போனைக் கண்டாலே ரொம்பப் பயமாம்.

ஏன்...

செல்போனை வைத்து பயங்கரமான காரியமெல்லாம் நடக்குது. ஆபாச படமெடுத்து நடிகைகளின் இமேஜையே அழிக்கிறாங்க. இதுதான் நிஜமாகவே என் போன்றவர்களை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்துகிறது, என்றார் சங்கீதா.

'உயிர்' சங்கீதாவுக்கு 'செல்' பயமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X