சோகத்தில் முடிந்த ஸ்ரேயாவின் ஹாலிவுட் கனவு!

ரூ.13 கோடி செலவில் அசோக் அமிர்தராஜ் தயாரித்த தி அதர் எண்ட் ஆப் லைன் எனும் ஹாலிவுட் படத்தில் நாயகியாக நடித்தார் ஸ்ரேயா.
கடந்த வெள்ளிக்கிழமை அந்தப் படம் 100க்கும் குறைவான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியானது. ஆனால் அவரது நேரம் அந்தப் படம் முதல் வாரத்தோடு பல திரையரங்குகளில் தூக்கப்பட்டு விட்டது. வசூலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்குக் கூட இல்லையாம். ரூ.13 கோடி செலவு செய்த தயாரிப்பாளருக்கு முதல் வார முடிவில் கிடைத்துள்ள வசூல் ரூ. 28 லட்சம்தானாம்!
ரஜினியுடன் இவர் நடித்த சிவாஜி படம் மூன்றே நாட்களில் வெளிநாட்டு திரையரங்குகளில் இதைவிட 5 மடங்கு வசூலைக் குவித்தது நினைவிருக்கலாம்.
ஆங்கிலப் படம் தந்த மறக்க முடியாத அனுபவத்தால் வெறுத்துப் போயுள்ள ஸ்ரேயா மீண்டும் கோலிவுட்டுக்கே முழு நேரமும் செலவிடப் போவதாக அறிவித்துள்ளராம். அதுமட்டுமல்ல... இரண்டாம் கட்ட ஹீரோக்களுடனும் நடிக்கத் தயார் என அறிவித்து, வாய்ப்புகளைத் தேடத் துவங்கிவிட்டார்.
அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. விஷால் நடிக்கும் தோரணம் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











