'பர்ந்து' அடிக்கும் பவானி!

ரொம்ப வருடங்களுக்கு முன்பு விஜயசாந்தி அதிரடியாக நடித்து சரவெடியாக பொறிந்த படம் வைஜெயந்தி ஐ.பி.எஸ். இப்படம் ஹீரோயின்கள் வரிசையில் சூப்பர் ஸ்டாராக விஜயசாந்தியை மாற்றிய படம்.
இப்படத்தை இப்போது ரீமேக் செய்யவுள்ளனர். விஜயசாந்தி வேடத்தில் ஸ்னேகா நடிக்கப் போகிறார். படத்துக்காக முழு வீச்சில் தயாராகி வருகிறார் ஸ்னேகா.
மனோஜ் கே. ஜெயன், கோட்டா சீனிவாசராவ், சம்பத் என படத்தில் ஸ்னேகாவுக்கு மூன்று வில்லன்களாம்.
இப்படத்துக்கு பவானி என பெயரிட்டுள்ளனர். படத்தில் ஸ்னேகாவின் கேரக்டர் பெயராம் இது. படத்தில் சண்டைக் காட்சிகள் இருப்பதால் அது தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ஸ்னேகா. மேலும் குதிரையேற்றம், பைக் ஓட்டுதல் உள்ளிட்ட சாகசங்களையும் கற்று வருகிறார்.
படத்திற்காக தனது எடையையும் குறைத்து படு டிரிம்மாகவும், ஸ்லிம்மாகவும் மாறியிருக்கிறாராம் ஸ்னேகா.
நெல்லையில் படப்பிடிப்பு தொடங்கி படு வேகமாக வளர ஆரம்பித்துள்ளது.
எதிரிகளை துவைக்கவும், குற்றவாளிகளை குமுறவும் பவானி, பவனி வருகிறார்.
பராக், பராக், பராக்!


Click it and Unblock the Notifications











