Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ரவிக்கு ஜோடியானார் ஸ்ருதி!
ஸ்ருதி முதலில் நாயகியாக நடிக்கவிருந்தது மாதவனுடன் ஒரு தமிழ்ப் படத்தில்தான். ஆனால் பின்னர் அந்த வாய்ப்பை மறுத்து விட்டார் ஸ்ருதி. சில மாதங்கள் கழித்து இந்தியில் லக் என்ற படத்தில் ஸ்ருதி அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அமையவில்லை.
அதேநேரம், தனது அப்பா கமல் நடித்த உன்னைப் போல் ஒருவன் படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்றினார். ஒரு வெற்றிப் படத்தில் அவரது பங்களிப்பும் இருந்த வகையில் முதல் முயற்சியிலேயே வெற்றிக் கோட்டைத் தொட்டு விட்டார் ஸ்ருதி.
இந்நிலையில் மீண்டும் நாயகி வாய்ப்பு வந்துள்ளது அவருக்கு.
ஜெயம் ரவியை வைத்து பிரபு தேவா இயக்கும் பாரிஸ் என்ற படத்தில் முதலில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய முயன்றார் பிரபு தேவா. ஆனால் அதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது ஜெயம் ரவி தரப்பிலிருந்து. எனவே வேறு நாயகியைத் தேடிவந்தனர். இப்போது, ஸ்ருதியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.