பத்து வருஷம் பீல்டுல இருக்கேன்னா சும்மாவா! - தம் கட்டும் த்ரிஷா

"நானாக எந்த வாய்ப்பையும் எப்போதும் தேடிப் போனதில்லை (நம்பிட்டோம்!). என்னைத் தேடி வந்த எத்தனை வாய்ப்புகளை கதை சரியில்லை என உதறியிருக்கிறேன் தெரியுமா?
தேவையில்லாமல் என்மேல் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. புதுமுக நடிகைகளால் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்றெல்லாம் சொல்வதில் உண்மை இல்லை. புது நடிகை புதுநடிகை என்கிறார்களே... நானென்ன வயசாகி, தலைநரைத்தா நிற்கிறேன்?
தெலுங்கில் இன்றைக்கும் எனக்காகத்தான் படங்கள் காத்திருக்கின்றன. இப்போதைக்கு கங்கா என்ற படத்தை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளேன். விரைவில் 'பாடிகார்டு' வரவிருக்கிறது.
என் செல்வாக்கு சரியவில்லை. என் படத்தை ரசிகர்கள் தொடர்ந்து ரசிக்கிறார்கள். திறமை இருந்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும். என்னுடைய திறமையை நம்பித்தான் சினிமாவிற்கு வந்தேன். சினிமாவில் 10 வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன். இத்தனை வருடங்கள் இங்கே தாக்குப் பிடிக்கிறேன் என்றால் சும்மாவா?" என்கிறார் மூச்சுவிடாமல்!
சரி... த்ரிஷாதான் தமிழ் தெலுங்கில் நம்பர் ஒன்... போதுமா!


Click it and Unblock the Notifications











