தனிஷாவின் முடிவு

கஜோலின் செல்லத் தங்கச்சி தனிஷா. தமிழில் ஒரு படத்தில் தலை காட்டினார் தனிஷா. மறைந்த ஜீவா இயக்கத்தில் வினய்யுடன் இணைந்து தனிஷா நடித்த உன்னாலே உன்னாலே நன்றாக ஓடிய படம்தான்.
ஆனால் தனிஷாவைத் தேடி அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் தனிஷா இந்தியில் தீவிரமாகி விட்டார். இந்தியில் தனிஷாவுக்கு கவர்ச்சி நடிகை என்ற பெயர் கிடைத்துள்ளது.
தனிஷாவும், முடிந்த வரை கிளாமராக நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார். எனவே தனிஷா படம் என்றாலே அது கிளாமர் - அன்லிமிட்டெட் என்றாகி விட்டது. ஆனால் இதற்கு நேர் மாறாக ஒரு இந்திப் படத்தில் பக்காக பாரம்பரியப் பெண்ணாக நடிக்கப் போகிறார் தனிஷா.
ராம் கோபால் வர்மா இயக்கப் போகும் அடுத்த படம் சர்க்கார் ராஜ். இதில் பக்கா மகாராஷ்டிரிய பெண்ணாக, அடக்கம் ஒடுக்கமாக நடிக்கப் போகிறாராம் பெங்காலி ரசகுல்லா தனிஷா.
இதுதவிர பெங்காலி மொழிப் படம் ஒன்றிலும் தனிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திலும் அவருக்கு கிளாமர் இல்லாத காஸ்ட்யூம்தான்.
இப்படங்கள் வெற்றி பெற்றால், தனது காஸ்ட்யூம் ஸ்டைலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் தொடர்ந்து இதுபோல வித்தியாசமான ரோல்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார் தனிஷா.
நல்ல முடிவுதான்.


Click it and Unblock the Notifications











