அக்கா ரெட்டியைக் கைவிட்ட தங்கச்சி ரெட்டி!
சமீரா ரெட்டி பெரும் சோகத்துடன் உள்ளாராம். காரணம், தனது தங்கை தயாரிக்கும் தெலுங்கு, இந்திப் படத்தில் தன்னை நாயகியாகப் போடாததாலாம்.
இந்தியில் நடித்து வரும் சமீரா ரெட்டி, வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆனால் அசல் படத்தில் அவர் ரசிகர்களை ஏமாற்றி விட்டார். இருந்தாலும் தற்போது மீண்டும் கெளதம் மேனனின் நடு நிசி நாய்களை நம்பியுள்ளார். இப்படம் தனக்கு நல்ல பெயரை மட்டுமல்லாமல் விருதையும் சேர்த்து அள்ளித் தரும் என்று நம்புகிறாராம் ரெட்டி.
இந்த சந்தோஷத்தில் இருந்து வந்த சமீராவுக்கு தங்கச்சி சுஷ்மா ரெட்டி மூலம் ஒரு சோகம் வந்து சேர்ந்தது. சுஷ்மா ரெட்டி ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரு படம் தயாரிக்கிறார். ஆனால் இதில் நாயகியாக சமீராவை அவர் தேர்வு செய்யவில்லையாம்.
சொந்த தங்கச்சியே தனது படத்தில் தன்னை நாயகியாகப் போடாதது குறித்து சமீராவுக்கு ஏமாற்றமாம். இருந்தாலும் நடுநிசி நாய்கள் மூலம் தனக்கு வரப் போகும் ஏற்றத்தை நினைத்து ஆறுதல் படுத்திக் கொண்டாராம் தன்னைத் தானே...


Click it and Unblock the Notifications











