நயனதாரா 'டல்' - திரிஷா 'ஜில்'!

தமிழ் சினிமாவில் நாயகர்களுக்கும், நாயகிகளுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி இருப்பது சகஜமான ஒன்றுதான். சில நேரம் இது ஆக்வர்ட் ஆக மாறுவதும் உண்டு.
நாயகிகளுக்கு நடக்கும் போட்டியில் ஒருவர் வாய்ப்பை இன்னொருவர் தட்டிப் பறிக்கும் சம்பவங்களும் நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திரிஷாவுக்கும், நயனதாராவுக்கும் இடையே நம்பர் ஒன் போட்டி கடுமையாகியுள்ளது. இருவரும் சில மாதங்களுக்கு முன்பு வரை நல்ல தோழிகளாகத்தான் இருந்தனர். ஆனால் இடையில் என்ன புகுந்ததோ, இருவருக்கும் இடையிலான நட்பு முன்பு போல சகஜமாக இல்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் யார் நம்பர் ஒன் என்பதில் இருவருக்கும் இடைேய கடும் போட்டி நிலவுகிறது.
இதில் தற்போதைக்கு நயனதாராவின் கையே ஓங்கியிருப்பதால் திரிஷா தரப்பு சற்றே டல் ஆக காணப்பட்டது. ஆனால் நயனதாரா ஹீரோயினாக நடித்து வெளியான குசேலன், சத்யம் ஆகிய இரு படங்களும் பெரிய அளவில் பேசப்படாததால், நயனதாரா டல் ஆகி விட்டார். திரிஷா தரப்பு உற்சாகமாகி விட்டதாம்.
திரிஷா தரப்பினர் இதை பார்ட்டி வைத்து கொண்டாடியதாகவும் கூட கூறுகிறார்கள். ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் திரிஷா விருந்துக்கு ஏற்பாடு செய்து தனது நெருங்கிய நண்பர்களை அழைத்து தடபுடலாக கொண்டாடியதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இந்தப் போட்டி எங்கு போய் முடியுமோ என்ற கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது கோலிவுட்.


Click it and Unblock the Notifications