காங்கிரஸுக்கு திரிஷா பிரசாரம்?

தெலுங்கு தேசம் கட்சியின் அட்டகாச பிரசார ஸ்டாராக உருவெடுத்துள்ளார் ரோஜா. அவரது பிரசார ஸ்டைல், அதிரடி பேச்சு, படு தைரியமான அணுகுமுறை அக்கட்சியினரை குஷிப்படுத்தி வருகிறது.
அதேபோல பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவரான நடிகர் சிரஞ்சீவி தனது ஸ்டார் செல்வாக்கால் போகும் இடமெல்லாம் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டிருக்கிறார்.
இதைப் பார்த்த ஆந்திர மாநில காங்கிரஸ் திரிஷா உள்ளிட்ட சில முக்கிய நட்சத்திரங்களை தன் பக்கம் இழுத்துள்ளது.
காங்கிரஸுக்காக பிரசாரம் செய்ய வேண்டும் என திரிஷாவை அணுகியுள்ளனர். அவரும் சரி என்று சொல்லி விட்டதாக தெரிகிறது. இருப்பினும் ஆந்திராவில் மட்டும், அதுவும் சில முக்கியமான தொகுதிகளில் மட்டும் திரிஷா பிரசாரம் செய்வார் என்கிறார்கள்.
திரிஷாவுக்கென்று உள்ள பெரும் ரசிகர் கூட்டம் காங்கிரஸுக்கு ஆதரவாக இதன் மூலம் திரும்பும் என காங்கிரஸார் நம்புகின்றனர்.
படப்பிடிப்பு இல்லாத சமயமாக பார்த்து பிரசாரத்திற்கு திரிஷா வருவார் எனத் தெரிகிறது. இருப்பினும் இன்னும் பிரசாரத் திட்டம் ரெடியாகவில்லையாம்.


Click it and Unblock the Notifications











