வில்லி ஆகும் வித்யா பாலன்!

வெறுமனே நாயகியாக மட்டும் நடிப்பது மிகப் பெரிய போர் என்கிறார் வித்யா பாலன். விதம் விதமான கேரக்டர்களில் கலக்க வேண்டும். அதுதான் எனது ஆசை என்று கூறும் வித்யா, அடுத்து நடிக்கப் போகும் இஷ்கியா படத்தில் வில்லியாக வெளுத்து வாங்கப் போகிறாராம்.
விஷால் பரத்வாஜ் தயாரிக்கும் இப்படத்தை அவருடைய உதவியாளரான அபிஷேக் செளபே இயக்கவுள்ளார்.
இப்படத்தில் பழம் பெரும் நடிக் நஸ்ருதீன் ஷா, அர்ஷத் வர்ஷி ஆகியோரும் உள்ளனர். நஸ்ருதீனுடன் வித்யா நடிக்கவிருப்பது இதுவே முதல் முறை. அதுவே பெரிய அனுபவமாக இருக்கும் என்று சிலிர்க்கிறார் வித்யா.
இதற்கிடையே, தான் நடித்துள்ள கிஸ்மத் கனெக்ஷன் படத்தின் புரமோஷனுக்காக படு பிசியாக ஓடியாடிக் கொண்டிருக்கிறாராம் வித்யா. இப்படம் 18ம் தேதி திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











