ராணாவில் ரஜினிக்கு இன்னொரு ஜோடி வித்யா பாலன்!
ரஜினியின் ராணா படத்தின் நாயகிகள் என்று கிட்டத்தட்ட இந்தியாவின் முன்னணி நடிகைகள் அனைவரது பெயர்களும் செய்திகளில் இடம்பெற்றுவிட்டன.
ஆனால் தீபிகா படுகோன் தவிர, வேறு நடிகைகள் யாரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், படத்தில் வரும் நடுத்தர வயது ரஜினிக்கு ஜோடியாக வித்யா பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ரஜினிக்கு என்டிடிவியின் எண்டர்டெயினர் ஆப் தி டெகேட் விருது வழங்கப்பட்டபோது, "ரஜினியுடன் மேடையில் இருப்பது கனவா நிஜமா என ஆச்சரியப்படுகிறார் என் தாயார். ரஜினியை அந்த அளவுக்கு நாங்கள் நேசிக்கிறோம்" என்று அவர் சொன்னது நினைவிருக்கலாம்.
வித்யா பாலன் ரஜினி மீது கொண்ட அன்பின் காரணமாக, இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்ததும் சட்டென்று ஒப்புக் கொண்டு கால்ஷீட் கொடுத்ததாகச் சொல்கிறார்கள்!
படிப்பவர்களுக்கு அலுக்கிறதோ இல்லையோ... படப்பிடிப்பு தொடங்கும் வரை இவர்தான் இரண்டாவது நாயகி என இன்னும் சில நடிகைகளின் பெயர்கள் உலா வரக்கூடும்!


Click it and Unblock the Notifications











