நட்டு ஜோடி விஜயலட்சுமி!

சென்னை 600028 படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார் விஜயலட்சுமி. தற்போது தனி நாயகியாக கலக்க ஆரம்பித்துள்ளார்.
ஜெய்க்கு ஜோடியாக அதே நேரம் அதே இடம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விஜயலட்சுமி அடுத்து நட்டு என்கிற நடராஜுடன் இணைகிறார்.
இந்த நட்டு வேறு யாருமல்ல, நாளை படத்தின் மூலம் 2வது நாயகனானவர். தொடர்ந்து சக்கரவியூகம் என்ற படத்தில் தனி நாயகனாக நடித்தார்.
தற்போது முழுநிலவு என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் விஜயலட்சுமியுடன் ஜோடி சேருகிறார் நட்டு. ரவிமரியா இப்படத்தை இயக்குகிறார். இவர் ஜீவாவை வைத்து ஆசை ஆசையாய் படத்தை இயக்கியவர்.
படத்திற்கு வித்தியாசமாக மிளகா என பெயரிட்டுள்ளார் மரியா. சுந்தர்.சி.பாபு இசையமைக்கிறார். வித்தியாசமான காதல் கதையாக இருக்குமாம் இது. அடுத்த மாதம் ஷூட்டிங்கைத் தொடங்கவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











