'அண்ணி' யுவராணி!

By Staff

Yuvarani
முன்னாள் நாயகியும், இன்னாள் டிவி நாயகியுமான யுவராணி, அம்மா, அண்ணி, அக்கா வேடங்களில் நடிக்க தயார் என ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார்.

பாட்ஷாவில் ரஜினியின் தங்கையாக நடித்து பிரபலமானவர் யுவராணி. பசும்பொன், செந்தூரப்பாண்டி, செல்லக்கண்ணி, சக்தி என பல படங்களில் நடித்துள்ளார். தனி நாயகியாக நீண்ட நாட்கள் வெற்றிக் கொடி நாட்ட முடியாமல் போனதால் மலேசியாவைச் சேர்ந்த ரவீந்திரா என்கிற தொழிலதிபரைக் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானார்.

யுவராணிக்கு தற்போது விஷ்ணு என்கிற 6 வயது மகனும், 2 வயதில் நித்யன் என்கிற மகனும் உள்ளனர். இன்னும் பழைய பொலிவுடன், அழகாக இருக்கும் யுவராணி, சித்தி தொடர் மூலம் டிவியிலும் பிரபலமானவர்.

சித்தி தொடரில் வில்லத்தனம் காட்டி நடித்த யுவராணி கல்யாணத்திற்குப் பின்னர் கணவருடன் மலேசியாவுக்குப் போய் விட்டார். தற்போது மீண்டும் சென்னை திரும்பி டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

சித்தி தொடரைக் கொடுத்த ராதிகாவின் ரேடான் நிறுவனம் தயாரிக்கும் சூரியவம்சம், திருவிளையாடல் ஆகிய தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் யுவராணி.

மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் யுவராணி. இனிமேல் சென்னையிலேயே செட்டிலாகப் போகிறேன். எனதுமகன் இங்குள்ள பள்ளியில் படித்து வருகிறான்.

மலேசியாவுக்குப் போன பின்னரும் கூட நான் சினிமாவை மறக்கவில்லை. அங்கு தயாரான கலர்புல் மலேசியா என்ற படத்தில் நடித்தேன்.

நடித்துப் பழகிய எனக்கு வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. அதனால்தான் டிவி தொடர்களில் நடித்து வருகிறேன்.

சினமாவிலும் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். அக்கா, அண்ணி, அம்மா வேடங்களில் நடிக்க நான் தயார் என்றார் யுவராணி.

அப்ப, விஜய், சூர்யா, அஜீத் ஆகியோரின் அம்மா, அக்கா, அண்ணி வேடங்களில் யுவராணியை எதிர்பார்க்கலாமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X