12 வேடம்- கின்னஸில் பிரியங்கா!

By Staff

Priyanka
வாட்ஸ் யுவர் ராசி என்ற புதிய படத்தில் 12 வேடங்களில் நடிக்கும் பிரியங்கா சோப்ரா, இதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிக்கவுள்ளார்.

காமினே படத்தில் நடித்ததற்காக சிறந்த விமர்சனங்களைப் பெற்றார் பிரியங்கா. இந்த நிலையில் அடுத்து வாட்ஸ் யுவர் ராசி படத்தில் 12 வேடம் பூணுகிறார். விரைவில் இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறப் போகிறதாம்.

இந்த சாதனை குறித்து பிரியங்கா சோப்ரா கூறுகையில், இதை நான் எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் எனது பெயரும் இடம் பெற சற்று நாட்களாகும். எனது பெயரும் பரிந்துரையில் உள்ளதாக அறிகிறேன்.

கின்னஸ் அதிகாரிகள் எனது படத்தைப் பார்வையிடுவார்கல். அதன் பின்னர்தான் அது சாதனையா என்பதை அவர்கள் முறைப்படி அறிவிப்பார்கள். படம் ரிலீஸாவதற்கு முன்பு அந்த அறிவிப்பு வெளியாகும் என நினைக்கிறேன். அந்த நாளுக்காக பதட்டத்துடன் காத்திருக்கிறேன்.

அப்படி நடந்தால், நாளைக்கு நான் பாட்டியாகும்போது எனது பேரப்பிள்ளைகளை உட்கார்த்தி வைத்து இந்த சாதனையை கதை கதையாக சொல்லி மகிழ எனக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி சிரிக்கிறார் பிரியங்கா.

தொடர்ந்து பிரியங்கா கூறுகையில், நான் பரேலியைச் சேர்ந்த சாதாரண ராணுவ குடும்பத்தைச் சேர்ந்த பெண். மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்றபோது நானும் சரி, எனது குடும்பத்தினரும் சரி அதை எதிர்பார்க்கவில்லை. எல்லாமே எனக்கு எதிர்பாராமல்தான் நடந்து வருகிறது என்றார் பிரியங்கா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X