சோஹாவின் 'லிப் லாக்'

மும்பையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைப் பின்னணியாகக் கொண்டது இப்படம். இதில் இம்ரான் ஹஸ்மியும், சோஹா அலி கானும் ஜோடி போட்டுள்ளனர். குணால் தேஷ்முக் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில், ஹஸ்மியும், சோஹா அலி கானும் லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளனராம். இந்த முத்தக் காட்சியில் சோஹா அலி கான் சற்றும் தயக்கம் காட்டவில்லையாம்.
ஒரு பாடல் காட்சியில் இந்த முத்தக் காட்சி இடம் பெறுகிறதாம். முதலில் சோஹா தயங்கினாலும், குணால் தேஷ்முக் முத்தக் காட்சியின் அவசியத்தை விளக்கிக் கூறியதும் ஏற்றுக் கொண்டு நடித்துக் கொடுத்தாராம்.
இந்த முத்தக் காட்சியைப் படமாக்கியதும் இன்னொரு முத்தக் காட்சியை வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்த குணால் மறுபடியும் சோஹாவிடம் சொல்ல, மறுபடியுமா என்று தயங்கியுள்ளார். இருப்பினும் பின்னர் ஓ.கே. சொல்லி விட்டாராம்.
இதுகுறித்து சோஹா கூறுகையில், அது ஒரு இனிமையான முத்தக் காட்சி. அழகாகப் படம் பிடித்துள்ளனர். ஆபாசமாக இருக்காது. காட்சிக்கும், சூழலுக்கும் தேவையான ஒன்று அது என்றார் புன்னகைத்தபடி.


Click it and Unblock the Notifications











