ஸ்னேகாவின் கொடும்பாவி எரிப்பு!

இந்த பரபரப்புச் சம்பவம் இன்று நாமக்கல்லில் நடந்தது.
நடிகை ஸ்னேகா திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற போது செருப்புடன் சென்றதாக படத்துடன் செய்தி வெளியானது.
இதுப்பற்றிய தகவல் தெரியவந்ததும் இந்து முன்னணி அமைப்பினர் ஸ்னேகாவுக்கு பார்சலில் செருப்பு அனுப்பும் போராட்டத்தை நடத்தினர். ஆனால் பின்னர் ஸ்னேகா அளித்த விளக்கத்தை ஏற்று அமைதியாகிவிட்டனர். ஆனால் அனுமன்சேனா போன்ற பிற அமைப்புகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றன.
பல்வேறு இடங்களிலும் அவருக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்ட இந்து மக்கள் கட்சி (அனுமன்சேனா) யினர் நாமக்கல்-மோகனூர் ரோட்டில் உள்ள சப் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். பின்னர் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் அவர்கள் ஸ்னேகாவின் கொடும்பாவியை எரித்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அங்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் ஓடிவிட்டனர். நேற்று இந்த அமைப்பேச் சேர்ந்தவர்கள்தான் வேலூரில் ஸ்னேகா படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து பரபரப்பேற்படுத்தினர்.


Click it and Unblock the Notifications











