சைஸ் ஜீரோ .. கரீனா மறுப்பு

By Staff

Kareena Kapoor
எனது உடல் எடை சைஸ் ஜீரோ அளவுக்கு (அதாவது பயங்கர ஒல்லிப்பிச்சான்) போகவில்லை. அதை விட பெட்டரான உடல் வாகுடன் உள்ளேன் என்கிறார் கரீனா கபூர்.

கரீனா கபூர் வர வர படு வேகமாக உள்ளே போய்க் கொண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். படு தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை கிட்டத்தட்ட சைஸ் ஜீரோ அளவுக்கு கரீனா கொண்டு போய் விட்டதாகவும் கூறப்பட்டது.

இதனால் பார்க்க படு ஒல்லியாக தோன்றுகிறார் கரீனா. ஆனால் தான் ரொம்பவும் ஒல்லியாக இல்லை, சைஸ் ஜீரோ அளவை விட சற்று பெட்டராகவே இருப்பதாக கூறுகிறார் கரீனா.

உண்மையில், தஷான் படத்தில் நடிப்பதற்காகத்தான் சைஸ் ஜீரோவுக்கு மாறினார் கரீனா. பாலிவுட்டில் சைஸ் ஜீரோவுக்கு மாறிய முதல் ஹீரோயின் கரீனாதான். இவரைப் பார்த்து பலரும் ஒல்லிப்பிச்சான் உடல் வாகுக்கு மாறத் தொடங்கினர்.

ஆனால் தற்போது தான் மிகவம் ஒல்லியாக இல்லை, சற்று பெட்டராகவே இருப்பதாக கூறுகிறார் கரீனா. முன்பை விட நான் பெட்டராகவே இருக்கிறேன்.

நான் தீவிரமாக யோகா செய்கிறேன். அதன் சக்தி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அதை நான் ரசிக்கிறேன், மதிக்கிறேன், வணங்குகிறேன்.

எனது உடல் பொலிவுக்கு குறிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. நிறைய காய்கறிகளை சாப்பிடுகிறேன். நிறைய தண்ணீர் குடிக்கிறேன்.

இந்த நாட்டின் இளம் பெண்களில் நானும் ஒருத்தி. எனவே இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் எடுத்துக் காட்டாக விளங்க வேண்டுமானால், நாம் முதலில் இளமையாக இருக்க வேண்டும். அதனால்தான் எனது உடலை இளமையாக வைத்திருக்க முயலுகிறேன் என்கிறார் கரீனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X