ஜீவா படத்தில் மீரா!

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படம் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. ஜீவா நாயகனாக நடிக்கிறார். பிருந்தா சாரதி இயக்கவுள்ளார்.
படத்தின் நாயகியாக மீரா ஜாஸ்மின் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம் பிருந்தா சாரதி. காரணம், அந்த கேரக்டரை செய்ய மீராவால் மட்டுமே முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுன் இருக்கிறார் பிருந்தா.
பிருந்தாவின் இந்த பிடிவாதம் இப்போது வெற்றி பெற்றுள்ளது. மீராவிடமிருந்து சாதகமான பதில் வந்துள்ளதாம்.
இதுதவிர சேரன், நவ்யா நாயரையும் பிருந்தா சாரதி அணுகியுள்ளாராம். இந்த ஜோடிக்கும் முக்கியமான பங்கு இருக்கிறதாம். ஏற்கனவே சேரனும், நவ்யாவும் மாயக்கண்ணாடி, ஆடும் கூத்து ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இப்படத்தில் நடித்தால் ஹாட்ரிக் அடிக்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications