மேக்னாவுக்கு 'காப்பி' பிடிக்காதாம்!
கலர் ஜெராக்ஸில் எடுத்த கோபிகையின் படம் போல பார்க்க பளிச்சென இருக்கிறார் மேக்னா. ஆனால் அவருக்குத்தான் 'காப்பி' அடிக்கப் பிடிக்காதாம்.
வைதேகி காத்திருந்தாள் படம் பார்த்திருக்கிறீர்களா. அதில் விஜயகாந்த்தின் பிளாஷ்பேக்கில் அடிக்கடி ஒரு பெண்ணின் இரு கால்களை மட்டும் காட்டுவார்கள். பிறகு பிளாஷ்பேக் ஓபனாகி அந்தப் பெண்ணை முழுதாக காட்டுவார்கள். அந்த நடிகை பெயர் பிரமீளா ஜோஸ். அவருடைய அழகுப் பெண்தான் நம்ம மேக்னா (அப்பாடா, எவ்ளோ சுருக்கம்..)
காதல் சொல்ல வந்தேன் படத்தின் நாயகிதான் மேக்னா. ஆனால் அதற்கு முன்பே கிருஷ்ணலீலை படத்தில் நடித்து விட்டார். படம்தான் வரவில்லை. அதற்குள் 2வது படம் முந்திக் கொண்டு வருகிறது.
அம்மா வழியில் நடிக்க வந்துள்ள மேக்னா பார்க்க அவரைப் போல இருக்கிறார், இவரைப் போல இருக்கிறார் என்று பட்டையைக் கிளப்ப ஆரம்பித்து விட்டனர் திரையுலகினர். குறிப்பாக பார்த்திபன், இவரைப் பார்த்து பார்க்க அப்படியே நயனதாரா போலவே இருக்கிறார் என்று வத்தியைக் கொளுத்தி வைத்து விட்டுப் போக அப்ப மேக்னாதான் அடுத்த நயனதாரா என்று பேச ஆரம்பித்து விட்டனர்.
அப்படியா என்று மேக்னாவிடம் கேட்டால்,இதை பாராட்டாக கருதுகிறேன். ஆனால் நான் அவரைப் போல இருக்கிறேனா என்றெல்லாம் தெரியாது. நயனதாரா ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை. நான் இப்போதுதான் வளர ஆரம்பித்துள்ளேன். இருந்தாலும் அவருடன் இணைத்துப் பேசுவதால் மகிழ்ச்சி.
அதற்காக நான் நயனதாரா போல நடிப்பேன் என்றெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. அவருடைய ஸ்டைல் வேறு.எனது ஸ்டைலும் வேறாகஇருக்கும். எனக்கு அடுத்தவர்களைப் பார்த்து காப்பி அடிக்கப் பிடிக்காது என்றார் மேக்னா.
சரி உங்களை அவருடன் ஒப்பிட்டுப் பேசுவதால் நயனதாரா டென்ஷனாக உள்ளாராமே என்று கேட்டபோது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் என்னிடம் அப்படியெல்லாம் பேசவே இல்லை என்றார் மேக்னா.
இவ்ளோ தூரம் வந்து விட்டு, நயனதாரா-பிரபுதேவா காதல் பற்றிக் கேட்காவிட்டால் எப்படி. அதுகுறித்து மேக்னாவிடம் கேட்டால், பிறருடைய சொந்த விஷயம் குறித்து நான் எப்படிப் பேச முடியும் என நழுவி விட்டார்.
மேக்னா என்ற காந்தம் வந்திருக்கிறது. எத்தனை நடிகைகளின் மார்க்கெட்டை இது கவர்ந்து இழுக்கப் போகிறதோ...


Click it and Unblock the Notifications











