தெலுங்கில் காஜல் அலை!

By Staff

Kajal Agarwal
பழனி நாயகி காஜல் அகர்வால், தெலுங்கில் பிசியாகி விட்டார். ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க புக் ஆகியுள்ளார்.

பாரதிராஜாவின் கண்டுபிடிப்பு காஜல் அகர்வால். அவரது பொம்மலாட்டம் படம்தான் காஜலின் முதல் படம். ஆனால் பொம்மலாட்டம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்த கேப்பில் பழனி மூலம் பரத்துக்கு ஜோடியாக நடித்து, தமிழ் ரசிகர்களை வசீகரித்து விட்டார் காஜல் அகர்வால்.

காஜலின் வசீகரமும், கிளாமர் வாகும் அவருக்கு தமிழில் நல்ல வாய்ப்புகளை கொடுத்து வரும் நிலையில், தெலுங்கிலும் வாய்ப்புகள் நிறைய வருகிறதாம்.

சமீபத்தில் அவர் நடித்த சந்தமாமா வெளியாகி ஹிட் ஆகவே காஜலும் தெலுங்கு ரசிகர்களிடையே ஹிட் ஆகி விட்டார். இப்போது காஜலும் தெலுங்கு திரையுலகில் ஹாட் நாயகிகளில் ஒருவர்.

தமிழோடு சேர்ந்து தெலுங்கும் தாலாட்டுவதால் சந்தோஷமாகியுள்ள காஜல் அகர்வால், புதிதாக இரு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒன்றில் அவருக்கு ஜோடியாக ராம் சரண் நடிக்கிறார். இன்னொரு படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடி போடுகிறார்.

இந்தப் படங்கள் வெளியானால் நிச்சயம் இலியானா கிலியாகி விடுவார் என்று ஆந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X