'படகோட்டி பாமா' கமலினி!

நடிக்க ஒப்புக் கொண்ட ஓரிரு படங்களிலிருந்தும் ஆர்வமில்லை எனக் கழன்று கொண்டாராம். ஆனால் மலையாளம், தெலுங்கில் தேடித் தேடி படங்களை ஒப்புக் கொள்கிறாராம் கமலினி.
சமீபத்தில் அவர் தேடிப்போய் ஒப்புக் கொண்ட படம், மம்முட்டி நடிக்கும் குட்டி ஷ்ரங்கு. படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் கமலினி. இவரைத் தவிர இன்னும் இரு கதாநாயகிகளும் படத்தில் உள்ளனர்.
படகோட்டி பாமா எனும் பாத்திரத்தில் நடிக்கும் கமலினிக்கு மம்முட்டியை ஒருதலையாய் காதலிக்கும் வேடமாம். ஒருதலைக் காதல் என்றாலும் எனக்கு டூயெட்டெல்லாம் உண்டு என்கிறார் பெருமையாக.
எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது...


Click it and Unblock the Notifications











