ரிஷீகாவை கஷ்டப்படுத்திய டூ பீஸ்!

கன்னட இயக்குநர் ராஜேந்திர சிங் பாபு மகள்தான் இந்த ரிஷீகா. கன்னட சினிமாவின் இளம் நாயகி. இளமை கொஞ்சும் இந்த நாயகி, எப்படிப்பட்ட ரோலிலும் நடிக்க தயார் என்கிறார் அதிரடியாக. கதைக்குத் தேவை என்றால் முத்தமிடுவது போன்ற காட்சியிலோ அல்லது ஆடை அவிழ்ப்புக் காட்சியிலோ கூட நடிககத் தயங்கக் கூடாது என்று எனது அப்பா சொல்லிக் கொடுத்துள்ளார். எனவே எந்த கேரக்டராக இருந்தாலும், கதைக்குப் பொருத்தமாக இருந்தால் நான் தயார்தான் என்கிறார் ரிஷீகா.
ஆனால் சமீபத்தில் டூ பீஸ் உடையில் நடித்தபோது ரொம்ப சங்கடமாகி விட்டதாம். கான்டீரவா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார் ரிஷீகா. இதில் அவர் ஒரு பாடலுக்கு பிகினி உடையில் வருகிறாராம்.
முதல் படத்தில் நாயகிகளை கவர்ச்சியில் குளிப்பாட்டுவது இயக்குநர்களின் வாடிக்கைதான். அந்த நியதி மாறாமல், ரிஷீகாவையும் கவர்ச்சிக் குளியல் போட வைத்துள்ளாராம் இப்படத்தின் இயக்குநர்.
ஆனால் இயக்குநரே வியந்து போகும்அளவுக்கு கவர்ச்சியில் புகுந்து விளையாடி வருகிறார் ரிஷீகா. இதுகுறித்து அவர் கூறுகையில், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற வேடத்தில் நடிக்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால் நான் வித்தியாசமாக இருக்க விரும்புகிறேன்.
கன்னட சினிமாவில் கவர்ச்சி நாயகிகளுக்குப் பஞ்சம் உள்ளது. அதை சரி செய்ய நான் விரும்புகிறேன். எனக்கு கவர்ச்சிகரமான உடைகள் பொருத்தமாக இருக்கும்.
டூபீஸில் நடிக்கக் கூட நான் தயார்தான். கான்டீவராவில் நடித்தும் உள்ளேன். இருப்பினும் டூபீஸ் அணிந்து நடித்தபோதுதான் சற்று சிரமமாக உணர்ந்தேன். பாங்காக்கில் வைத்து அந்தக் காட்சியைப் படமாக்கினார் இயக்குநர்.
டூபீஸ் அணிந்தபோது பெரிதாக தெரியவில்லை. ஆனால் நீச்சல் குளத்திலிருந்து நான் எழுந்தபோது குறைந்தது 30 ஆண்களாவது என்னை விறைத்துப் போய் பார்த்தனர். இதனால் சற்று சங்கோஜமாகி விட்டது என்கிறார் ரிஷீகா.
இருக்காதே பின்னே, என்னதான் இருந்தாலும் தெற்கத்திப் பெண்ணாயிற்றே ரிஷீகா!


Click it and Unblock the Notifications











