'சைட்' தொடங்கும் கரீனா!

By Staff

Kareena Kapoor
வெப் சைட் வைத்துள்ள பாலிவுட் பிரபலங்கள் வரிசையில் கரீனா கபூரும் இணையவுள்ளார். விரைவில் தனக்கான பிரத்யேக வெப்சைட்டை அவர் தொடங்க உள்ளார்.

வெப்சைட், பிளாக் என்று நடிகர்களும், நடிகைகளும் பூந்து விளையாட ஆரம்பித்து விட்டனர். அரசியல்வாதிகள் அறிக்கை போர் செய்வதை போல தங்களது பிளாக்குகள் மூலம் சக கலைஞர்களை விமர்சிக்கும் அளவுக்கு கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஆமிர்கான், அனுராக் காஷ்யப், குனால் கோஹ்லி வரிசையில் பாலிவுட்டின் நம்பர் 1 நடிகை கரீனா கபூரும் வெப்சைட் தொடங்க உள்ளாராம்.

அவரது நடிப்பை புகழ்ந்து தள்ளும் விதமாக ஜப் வி மெட் படம் ஹிட்டாகிவிட்டது. இதையடுத்து ரசிகர்களுடனான தனது தொடர்பை நெருக்கப்படுத்தும் வகையில் பிரத்யேக வெப்சைட்டை தொடங்க உள்ளார் கரீனா.

விக்டோரியா பெக்காம், மடோனா, ஜெனிபர் லோபஸ் போன்றோரின் வைப் சைட்டுகளைப் போல கரீனாவும் இணையதளமும் அமையப் போகிறதாம்.

கரீனாவுக்கு பேஷன் டிசைனிங்கில் பயங்கர ஆர்வம். அவரே வடிவமைத்த ஆடைகளையே பெரும்பாலும் அணிவார். அவர் நடிக்கும் படங்களிலும் அவருக்கான ஆடைகளை கரீனாவே டிசைன் செய்வார். அது குறித்தும் இந்த தளத்தில் தகவல்கள் இடம் பெறுமாம். அதேபோல பிற பேஷன் டிசைனிங் குறித்த தகவல்களும் இந்த தளத்தில் இடம் பெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X