உலகின் செக்ஸியான பெண்ணாக காத்ரீனா கைப் தேர்வு

ஆன்லைன் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் இந்த சர்வே நடத்தப்பட்டது. தீபிகா படுகோனை வீழ்த்தி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார் காத்ரீனா. கடந்த ஆண்டு தீபிகாதான் செக்ஸியான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளிலும் உலகின் செக்ஸியான பெண்ணாக காத்ரீனா தேர்வாகியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். மேலும் 3 முறை இந்தப் பெருமையை அடைந்த ஒரே பெண் காத்ரீனாதான் என்பதும் குறிப்பிடத்தக்தது.
1984ம் ஆண்டு காஷ்மீரி தந்தைக்கும், இங்கிலாந்து தாய்க்கும் பிறந்தவர் காத்ரீனா. ஹாங்காங்கில் இவர் பிறந்தார். இவரது இயற்பெயர் காத்ரீனா டர்கோட். காத்ரீனா இளம் வயதாக இருக்கும்போது அவரது பெற்றோர் பிரிந்து விட்டனர்.
காத்ரீனாவின் தாயார் சூஸன் டர்கோட் ஹார்வார்டில் படித்தவர். வக்கீலாக பணியாற்றினார். பின்னர் சமூக சேவையில் இறங்கினார்.
காத்ரீனாவுடன் உடன் பிறந்தவர்கள் 7 பேர். அனைவரும் ஹவாயில் வளர்ந்தவர்கள். பின்னர் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தனர். இவரது சகோதரி இசபெல், சமீபத்தில் நிர்வாண கோலத்தில் ஒருவருடன் உடலுறவு கொள்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











