காவ்யாவுக்கு பிப்.5ல் கல்யாணம்

மலையாளத்தில் படு பிசியான ஹீரோயின்களில் காவ்யாவும் ஒருவர். அனைத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களுடனும் நடித்து விட்ட சாதனைக்குரியவர்.
தொடர்ந்து ஏக போக ராணியாக மலையாளத்தை வலம் வந்து கொண்டிருக்கும் காவ்யா தமிழிலும் நடித்துள்ளார். என் மன வானில், சாது மிரண்டா, காசி என சில படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் பட வாய்ப்புகள் வந்தபோதிலும் கூட தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து மலையாளத்திலேயே செட்டிலாகி விட்டவர் காவ்யா.
அவருக்கும், கேரள மாநிலம் காயங்குளத்தைச் சேர்ந்த நிஷால் சந்திராவுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. துபாயில், வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் காவ்யா.
பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்துள்ள இந்த திருமணம், பிப்ரவரி 5ம் தேதி கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் நடைபெறவுள்ளது.
திருமணத்திற்குப் பின்னர் 9ம் தேதி கொச்சியில் திரையுலகினருக்காக வரவேற்பு நடக்கிறது. பின்னர் உற்றார் உறவினர்களுக்காக 12ம் தேதி காவ்யாவின் சொந்த ஊரான நீலேஸ்வரத்தில் ஒரு வரவேற்பு நடைபெறுகிறதாம்.
கல்யாணத்திற்குப் பின்னர் காவ்யா கேரளாவுக்கு டாடா காட்டி விட்டு கணவருடன் துபாய் பறக்கிறார்.


Click it and Unblock the Notifications











