லஷ்மி ராய் கொடுத்த விருந்து

தமிழ் சினிமாவில் கை நிறையப் படங்கள் இல்லாவிட்டாலும் கூட பிசியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர்தான் லஷ்மி ராய். கன்னடத்தில் தற்போது பார்வையை ஓட விட்டுக் கொண்டிருக்கும் லஷ்மி ராய், சமீபத்தில் தனது 19வது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.
பிறந்த நாளையொட்டி திரையுலக நண்பர்களுக்கு அடையாரில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் விருந்தளித்துக் கெளரவித்தார். இதில், ஆர்யா, ஸ்ரீகாந்த், ஜெயம் ரவி, நமீதா, நிலா மற்றும் சிம்பு ஆகியோர் கலந்து கொண்டனர். பார்ட்டி படு ஜாலியாகவும், சூப்பராகவும் இருந்ததாம்.
அதே ஹோட்டலின் இன்னொரு பக்கம் இன்னொரு விருந்தையும் வைத்துள்ளார் லஷ்மி ராய். அது கிரிக்கெட் வீரர்கள் டோணி, ஸ்ரீசாந்த், பார்த்திவ் படேல் ஆகியோர்தான். இது இவர்கள் 3 பேருக்காக மட்டும் ஸ்பெஷலாக ஏர்பாடு செய்யப்பட்டதாம்.
இந்த மூன்று பேரில் ஸ்ரீசாந்த்துடன், சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவர் லஷ்மி ராய். பெங்களூரில் லஷ்மி ராய் கலந்து கொண்ட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற ஸ்ரீசாந்த் மணிக்கணக்கில் அவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூட முன்பு செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் லஷ்மி ராய் வைத்த விருந்தில் ஸ்ரீசாந்த், தனது சகாக்கள் டோணி, படேல் ஆகியோருடன் கலந்து கொண்டது கோலிவுட்டில் குசுகுசுப்பைக் கிளப்பி விட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











