இளமையை ஏன் வீணாக்க வேண்டும்?-மம்தா

By Staff

Mamtha Mohandoss
மலையாளத்தில் நடிக்கத் துவங்கி எல்லோரையும் போல தமிழுக்கு வந்தவர் மம்தா மோகன்தாஸ்.

ஆனால் இங்கு அவரது படங்கள் எடுபடாமல் போக, தெலுங்குப் பக்கம் எட்டிப் பார்த்தார். ஒரு சில படங்களிலும் நடித்தார். ஆனால் அங்கோ இவரது நடிப்பை விட குரலுக்கு மவுசு கூடிவிட்டது. அதன் விளைவு பிரபல பின்னணி பாடகிகளுடன் போட்டிப் போடும் அளவுக்கு வாய்ப்புகள் குவிந்தன மம்தாவுக்கு.

மீண்டும் நல்லநேரம் அவர் திரையுலக வாழ்க்கையில் எட்டிப் பார்க்க, முன்பு புறக்கணித்த அதே தமிழ்ப் படவுலகம் அவரை இருகரம் நீட்டி வரவேற்றது.

'குரு என் ஆளு' படத்தில் மாதவனுடன் நடித்து வரும் மம்தாவுக்கு இப்போது நிறைய வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றனவாம். ஆனால் குரு என் ஆளு முடிந்த பிறகுதான் அடுத்த படம் என்பதில் உறுதியாக இருக்கிறார் மம்தா.

தாய் மொழி மலையாளத்திலும் சில படங்களை ஒப்புக் கொண்டுள்ள மம்தா இனி முழு நேரமும் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறாராம்.

"நான் நடிக்கும் படத்தில் என் கேரக்டருக்கு மட்டும் என்றால் பாடலாம். இல்லாவிட்டால் பாட வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். இளமை இருக்கும்போதே அதற்கேற்ற பாத்திரங்களில் நடித்துவிட வேண்டும்" என்கிறார் மம்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X